#Exclusive | நித்யானந்தா... கைலாசா நாடு...! உண்மையா? .....பரபரப்புகளுக்கு விளக்கம் அளித்த ஈக்வேடார் அரசு தூதரகம்....

Exclusive | நித்யானந்தா... கைலாசா நாடு...! உண்மையா? .....பரபரப்புகளுக்கு விளக்கம் அளித்த ஈக்வேடார் அரசு தூதரகம்....
      Third-party image
சர்ச்சை சாமியார் நித்யானந்தா ஈக்வேடார் நாட்டின் அருகே கைலாச நாடு எனும் தீவை விலைக்கு வாங்கி தங்கி விட்டதாகவும், இமயமலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் ஈக்வேடார் அரசு விளக்கம் அளித்துள்ளது.
.     Third-party image

தமிழகத்தைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, பெங்களூரில் உள்ள பிடதியை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் பல இடங்களில்  ஆசிரமங்களை நடத்தி வந்தார். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் இயங்கி கொண்டிருக்கிறது.
.     Third-party image
பரபரப்புகளுக்கு பெயர் போன நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் தனது மகள்கள் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகாரளிக்க, மீண்டும் அவர் சர்ச்சையில் அடிபட்டார்.
.     Third-party image
இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வைரலாக வெளியாகி கொண்டிருக்கின்றன.
.    Third-party image
கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. எனினும், தினமும் Youtube வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் நித்யானந்தா.
.    Third-party image
இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஈக்வேடார் நாட்டின் தூதரக அதிகாரி நியூஸ் 18-க்கு அளித்துள்ள பேட்டியில், “நித்யானந்தா தஞ்சம் கோரி ஈக்வேடார் அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசு அதை ஏற்க மறுக்கவே ,அவர் ஹைதிக்கு சென்று விட்டார் என்று பேட்டியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Third-party image
கைலாசா என்ற ஒருநாடு ஈக்வேடார் நாட்டில் இல்லவே இல்லையாம் . நித்யானந்தா ஈக்வேடாரில் இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை” என்று அவர்கள் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

ரித்திக் ரோஷனின் சம்பளத்தை கேட்டால் மயங்கி விழும் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்... கொலை வழக்கில் உள்ளே போனாலும் ஆச்சரியமில்லை....