அதிர்ச்சி செய்தி: சென்னை CSK அணியில் இருந்து தன்னை வெளியேற்றக்ககோரிய தோனி! காரணம் என்ன?


பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று, ”ஐபிஎல் ஏலத்தின்போது சிஎஸ்கே அணியின் நிதியைக் கூட்டுவதற்காக தோனி தன்னை சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கக் கூறினார். பின்னர் ‘ரைட் டு மேச்’ வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னை மீண்டும் அணியில் எடுக்க அணி நிர்வாகத்துக்கு யோசனை வழங்கினார். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியின் இந்த முடிவை நிராகரித்துவிட்டது. இதன் காரணமாக தோனி தன்னை சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்குமாறு கூறியுள்ளார்” என்று செய்தி வெளியிட்டது.


உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணி விளையாடும் எந்தவிதமான தொடரிலும் தோனி பங்கேற்றாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தோனி ஓய்வு அறிவிப்பாரா என்று அவ்வப்போது செய்திகள் ஊடகங்களில் வெளிவாகி வருகின்றன. எனினும் , 2020-ம் ஆண்டு நடக்கும் 13-வது ஐபிஎல் போட்டிக்குப் பிறகு தோனி தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிர்ச்சி செய்தி: சென்னையிலிருந்து தன்னை வெளியேற்றக்ககோரிய தோனி! காரணம் என்ன? 1

இந்நிலையில்,

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்திய அணிக்கும், இளம் இந்திய அணி வீரர்களுக்கும், ஏன் அனுபவசாலியான கேப்டன் தோனிக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தோனி மீண்டும் அணிக்குள் வருவது, அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் ஆடுவது ஆகியவை 2020 ஐபிஎல் தொடரில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்ததே என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

38 வயதாகும் தோனி ஓய்வையும் அறிவிக்காமல், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஆடாமல் தேர்வுக்குழுவினை வெறுப்பேற்றி வந்ததால், அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு கேப்டன் கோலியும், அணி நிர்வாகமும் வந்ததாகத் தெரிகிறது.

அதிர்ச்சி செய்தி: சென்னையிலிருந்து தன்னை வெளியேற்றக்ககோரிய தோனி! காரணம் என்ன? 2

இந்நிலையில் தோனி மீண்டும் விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரவிசாஸ்திரி என்ன நினைக்கிறார் என்று தெரிய வேண்டுமே:

“தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வருவது என்பது அவர் எப்போது ஆடத்தொடங்குகிறார் என்பதைப் பொறுத்தும் வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்தும் உள்ளது. மேலும் மற்ற விக்கெட் கீப்பர்களின் பார்ம், தோனியின் பார்முடன் ஒப்பிடும்போது எப்படி உள்ளது என்பதையெல்லாம் அறுதியிட்டுத்தான் முடிவெடுக்க முடியும். வரும் ஐபிஎல் தொடர் இந்த விஷயத்தில் மிகப்பெரிய தொடர், உலகக்கோப்பை டி20 அணிக்கான 15 வீரர்களைத் தேர்வு செய்யும் முன்பாக கடைசியாக முடிவெடுக்க வேண்டிய தொடர் ஐபிஎல் தான்” என்றார் ரவிசாஸ்திரி.

Comments

Popular posts from this blog

ரித்திக் ரோஷனின் சம்பளத்தை கேட்டால் மயங்கி விழும் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்... கொலை வழக்கில் உள்ளே போனாலும் ஆச்சரியமில்லை....