போர்வை, துண்டுகளை விற்க தனிப் பேருந்து!' - அசத்தும் சென்னிமலை கைத்தறி கூட்டுறவுச் சங்கம்..

போர்வை, துண்டுகளை விற்க தனிப் பேருந்து!' - அசத்தும் சென்னிமலை கைத்தறி கூட்டுறவுச் சங்கம்.. நினைத்த ஒரு பொருளை வாங்குவதற்கு அலைந்து திரிந்து கால்கடுக்கப் பயணித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இன்றைக்கு மொபைல் மூலமாக ஒரே `கிளிக்'கில் நினைக்கும் பொருள்களை வீடு தேடி வர வைத்துவிட முடியும். அந்த அளவுக்கு ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இப்படியான ஆன்லைன் உலகிலும், தங்களுடைய பொருள்களைச் சந்தைப்படுத்த மக்களிடம் விதவிதமான அணுகுமுறைகளைக் கையாள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார். அந்தவகையில், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு கைத்தறி கூட்டுறவுச் சங்கமானது, தனி ஒரு பேருந்து மூலமாக கைத்தறியிலான பொருள்களை ஏற்றிக்கொண்டு மக்கள் மத்தியில் வலம் வந்து அசர வைக்கிறது.. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செயல்பட்டு வரும் `சென்குமார் தொடக்கக் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம்' தான் இப்படியான முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது... கைத்தறிப் போர்வைகள் மற்றும் துண்டுகளுக்குப் பெயர் பெற்ற சென்னிமலையில், கிட்டத்தட்ட 35 நெசவாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. அதில், பி...