முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் எடுத்த வீரர்

The Daily Tamil : கிரிக்கெட் நியூஸ்

முதல் தர கிரிக்கெட்டில்  ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் எடுத்த வீரர்

                 Third part image
சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகவேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்
டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார்.
 Third party image
ஒரே ஓவரில் 5 விக்கெட் 
சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, அரியானாவை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அரியானா 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 5 விக்கெட்டுகளையும் அவர் ஹாட்ரிக் உள்பட ஒரே ஓவரில் அறுவடை செய்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 Third party image
இன்னிங்சின் 20-வது ஓவரில் அவர் முதல்
4 பந்துகளில் ஹிமன்சுராணா (61ரன்), ராகுல்
திவேதியா (32 ரன்), சுமித் குமார் (0), அமித்
மிஸ்ரா (0) ஆகியோரையும் கடைசி பந்தில்
ஜெயந்த் யாதவையும் (0) காலி செய்தார்.
இதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் மூன்று
வடிவிலான கிரிக்கெட்டிலும் அதாவது சையத் முஸ்தாக் அலி (20 ஓவர்), விஜய்ஹசாரே (50ஓவர்) ரஞ்சி கோப்பை (4நாள் முதல்தர போட்டி) ஆகிய போட்டிகளில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை 30 வயதான அபிமன்யு மிதுன
படைத்தார்.

கர்நாடகா-தமிழகம்

 Third party image
அடுத்து களம் இறங்கிய கர்நாடகா 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் 87 ரன்களும் (11பவுண்ட ரி, 4 சிக்சர்), லோகேஷ் ராகுல் 66 ரன்களும் (4 பவுண்ட ரி, 6சிக்சர்) நொறுக்கினர்.அபிமன்யு மிதுன் மற்றொரு அரை இறுதியில் தமிழ்நாடு -ராஜஸ்தான் அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 9 விக்கெட்டுக்கு 112 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. விஜய் சங்கர் 2 விக்கெட்டும், ஆர்.அஸ்வின், நடராஜன்,வாஷிங்டன் சுந்தர், சித்தார்த், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த எளிய இலக்கை தமிழக அணி 17.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வாஷிங்டன் சுந்தர் (54ரன்) அரைசதம் அடித்தார்.இதே மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
#தமிழ்நாடு
#கர்நாடகா
#சையத் முஸ்தக் அலி
#டீ20
#இந்தியா

Comments

Popular posts from this blog

ரித்திக் ரோஷனின் சம்பளத்தை கேட்டால் மயங்கி விழும் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்... கொலை வழக்கில் உள்ளே போனாலும் ஆச்சரியமில்லை....